Saturday, August 29, 2020

ஓங்கார தத்துவம்

 

ஓம் என்னும் ஒப்பற்ற மொழியான ஓங்கார தத்துவம் ஆராய்ச்சிக்கு அடங்காது. எனினும், சிவாநுபூதிமான்கள் இதுபற்றி யருளியுள்ள அருள் மொழிகளைத் துணை கொண்டு இதன் தத்துவத்தை யறிய முயல்வது தவறாகாது என்று எண்ணுகிறேன்.

 

வேதங்கள் முழுவதும், வேதாந்த மெல்லாம், மற்ற சாஸ்திரங்கள் எல்லாம் இந்த 'ஓம்' என்ற வார்த்தையுள் அடங்கியுள்ளன. இந்தியாவில், பலசமயங்கள் உள்ள போதிலும், எல்லா சமயத்தவரும் 'ஓம்' என்ற மந்திரத்தை மனப்பூர்வமாக அங்கீகரிக்கின்றனர். முகம்மதியர்களும் கிறிஸ்தவர்களும் கூட பிரார்த்தனைகள் நடத்தும் பொழுது முடிவில் ஆமன்' என்று முடிக்கின்றனர். முகம்மதியர் ஆமன் என்னாது 'ஆமீன்' என்கின்றனர். தெய்வ பிரார்த்தனைகளில் எல்லாம் 'ஆமன்' அல்லது ஆமீன்' என்பதானது வேதாக்தத்தின் சரியான பொருளையே 'தருகின்றது. அதாவது “சொற்கள் முடிவடையும் இடம்" வேதாந்தத்தின் சாரமான 'ஓம்' என்பதையே ஏறக்குறைய உணர்த்துகின்றது. ஹிந்துக்களில் வேதாந்த முழுமையும் 'ஓம்' என்ற மந்திரத்திற்குள் அடங்கிவிடும். வேதாந்தங்களில் 'ஓம்' என்பதானது 'அ-உ-ம்' என்ற எழுத்துக்களின் சேர்க்கையேயாம். அ என்ற அட்சரம் வேதாந்த சாஸ்திரப்படி ஜட சம்பந்தமான பிரபஞ்சத்தைக் குறிக்கும். நாம் விழித்துக் கொண்டிருக்கையில் தெரியக் கூடிய தெல்லாம், சொப்பன அவஸ்தையில் அனுபவிப்பது எல்லாம், 'உ' என்ற எழுத்தால் அறிவிக்கப்படும். 'ம்' என்பது அறியப்படாதவைகளைக் குறிக்கும். இவ்விதம் அ-உ-ம், என்ற மூன்று எழுத்துக்களும் மூன்று வித அவஸ்தைகளின் அனுபவங்களை குறிக்கும்.
அதாவது இவற்றில் உலகம் முழுவதும் அடங்கியுள்ளது. இவ்வாறாக 'ஓம்' என்பது எல்லாம் சேர்ந்த ஒன்றையே குறிக்கின்றது.

 

'அ' என்பதால் குறிக்கப்படும் விழித்திருக்கும் பொழுது நாம் அறியும், உலகம், மற்ற இரண்டு காலங்களாகிய சொப்பன அவஸ்தை காலத்திலும், அறியப்படாத காலத்திலும் கூட வியாபித்திருக்கின்றது என்பது வெளிப்படை. ஆனால் அது நமக்கு அச்சமயம் முழுமையும் மறைந்து விடுகின்றது. அப்படியிருந்தும் அப்பொழுது கூட நம் ஆத்மா நம்மிடமே இருப்பதை காண்கின்றோம். புத்தியும் பிரக்ஞையும் அடங்கியுள்ள காலத்தும் உண்மையான ஆத்மா நம்மிடம் அப்படியே இருக்கின்றது. மாற்ற முடியாததும் சலிக்காததுமான தத்துவம் இந்த உண்மை நிலை மூன்று வித காலங்களிலும் வியாபகமாய் இருக்கின்றது. இதுவே 'ஓம்' என்பது.

 

எல்லாவகையான உணர்ச்சி அல்லது அறிவு உண்டாவதற்கு காரணம் அனுபவமே ஆகும். அனுபவம் விழித்த நிலையில் மட்டுமன்றி தூங்கும் நிலையிலும் உண்டாகலாம். வெளிக் கண்களும் காதுக்களும் தூங்கும் நிலையில் வேலைசெய்யாத நிலையில் இருந்தும், சொப்பன உலகில் அறியப்படும் பொருள்களையும் அவற்றிற் கேற்ப இந்திரிய கருவிகளையும் ஒரே காலத்தில் நாம் சிருஷ்டித்துக் கொள்ளுகின்றோம். அதனால் சொப்பனத்தில் அறியப்படும் பொருள்களும், அவைகளை அறிய எதுவாய் இருக்கும் இந்திரியங்களும், ஏககாலத்தில் ஜனிக்கின்றன. இப்படி அறிபவனும் அறியப்படும் விஷயங்களும் எந்த உண்மைப் பொருளின் மேல் எழும் அலைகளோ, அந்த உண்ரைப் பொருளே ஆத்மா அல்லது 'ஓம்' என்று வேதங்களில் குறிக்கப் படுகின்றது.

 

சொப்பன காலத்தில் நாம் அறியும் விஷயங்கள் விழித்த நிலையில் காணாது ஏமாறுகின்றோம். அப்படியே விழித்திருக்கும்போது நாம் காணும் உலகம் தூக்க நிலையில் நாம் காணுவதில்லை. இப்படி நாம் நோக்கும் பொழுது விழித்த நேரத்திலும் சொப்பன நேரத்திலும் நாம் காணும் உண்மைப்பொருள் அதாவது சத்தியநிலை பலிக்க காணோம். எப்பொழுதும் விடாமல் தொடர்வதே சத்தியநிலை. ஐரோப்பிய தத்துவ சாஸ்திரிகளுள், மேலான புகழ் வாய்ந்த ஹர்பர்ட் ஸ்பென்ஸர் என்பார் உண்மை அல்லது சாத்தியம் என்பதை விளக்கும் பொழுது ஒரு காலத்தில் தோன்றி சாயை போல மறைவது எதுவோ அதுவே மாயை ஆகும் என்கின்றார். "ஓம்" என்ற வார்த்தையுள் அடங்கியிருக்கும் அகாரம் நாம் விழித்திருக்கும் நிலையில் காணும் உலகைக் குறிக்கின்றது. சில சமயங்களில் அந்த அகாரம் மாத்திரை அல்லது உருவம் என்பதைக் குறிக்கும். ஆனால் ஓம் என்பது உருவத்துடன் நிற்பதில்லை. சத்தியப் பொருளையே அது குறிக்கின்றது. உருவங்களில் எல்லாம் ஊடுருவிச் செல்லும் உண்மைப் பொருளையே குறிக்கின்றது. வாழ்க்கையாவது என்ன? சொப்பன நிலையா? நல்ல தூக்கநிலையா? அல்லது விழித்திருக்கும் நிலையா? இவையெல்லாம் வெறும் தோற்றங்களே! உண்மையான சத்திய வாழ்க்கை நம் ஆத்மாவே! அந்த ஆத்மாவே ' ஓம்" என்பதால் குறிக்கப்படும். மித்தியமான உண்மைப் பொருளே 'ஓம்' சத்தியமான ஆத்மாவே நாம் ஆகின்றோம்.

 

வேதம் என்பது இருவகை பொருள்படும். அதன் ஆதிப்பொருள் ஞானம் அல்லது சுவர்க்கசுகம். மற்றொரு பொருள் சாஸ்திரங்கள். சமுத்திரத்தின் அடிவாரத்திற்கு வேதங்களை கொண்டு ஓடிய அசுரன் சங்காசுரன் (ஹிரணியாட்சன்) சங்கத்தில் வசிக்கும் அசுரன் அல்லது 'சங்கினுள் இருக்கும் பூச்சி' என்பதேயாகும். வேதங்களை கொணர ஈஸ்வரன் மச்சாவதாரம் எடுத்தார். அசுரனிடம் சண்டை போட்டு அவனைக் கொன்றார். வேதங்களை உலகிற்குத் திரும்ப கொடுத்தார். இக்கதையைப் படித்துவிட்டு நாம் அப்படியே பொருள் கொண்டு நாம் மூடக்கொள்கையில் மூழ்கி விடுன்கிறோம். ஆனால் அதன் உட்பொருள் அதாவது தத்துவார்த்தம் என்ன என்பதை ஆராய்வோம். சங்கு பூச்சியினிட மிருந்து வேதங்களைக் கொணர ஈஸ்வரன் மச்சாவதாரம் எடுத்தார். மச்சாவதாரமாகி, அசுரனாகிய, சங்குபூச்சியைக் கொன்றார். இதன்பொருள் என்ன? மச்சம் கடலில் வசிப்பது. சங்கினுள்ளும் கடலில் வசிக்கும் ஒரு ஜீவஜந்து உளது. மச்சம் சங்கினுள் வசிக்கும் பூச்சியை ஆகாரமாகக் கொன்று தின்றது. பூச்சி சங்கினின்றும் விரட்டப்பட்டது. அலைகள் சங்கை கடலோரம் ஒதுக்கின. ஜனங்கள் அதை எடுத்தனர். ஊதினர். அதினின்றும் "ஓம்" என்ற சப்தம் கிளம்பியது. இது தான் வேதம். இந்த பொருளில் சங்கமமாகும் வேதம் சமுத்திரத்தி னின்றும் வெளியே கொண்டு வரப்பட்டது.

 

இந்த கதை கூறிய மகான் "ஓம்'' என்ற மந்திரத்தின் பெருமையை விளக்கவே இதை இவ்விதம் ஆராய்ந்தார். ஜனனம், மரணம், தெய்வ வணக்கம், யுத்தம் என்ற காலங்களில் எல்லாம் "ஓம்'' என்ற "ஓம்'' என்ற சப்தத்தைச் சங்கின் மூலம் ஜெபிக்கின்றனர்.
 

“ஓம்” என்பது ஒரு குறிப்பிட்ட பாஷை பல்ல, குழந்தை பிறக்கும் பொழுதே 'ஊம்' 'ஓம்' 'ஆம்' என்று அழுகைக் குரலுடனேயே ஜெனிக்கின்றது. ஒவ்வொரு குழந்தைக்கும் 'ஓம்' என்ற தொனி உள்ளிருந்தே கிளம்புகின்றது. சந்தோஷமாய் இருக்கும் காலங்களிலோ ஆச்சர்யத்தின் மெய் மறதியாலோ சகிக்கமுடியாத உபத்திரவத்தை அனுபவிக்கும்பொழுது உதடுகளின் வழியே வெளிவரும் தொனி "ஓ" என்புதே ஆம். அது "ஓம்" என்பதன் சுருக்கமே. நோயாளிகளும் கஷ்டப்படுவோரும் அந்நிலையில் கூறும் ஓஓ அல்லது உம் உம்'' என்றவைகள் 'ஓம்' என்பதின் சிதைவுகளே. நோயாளிகள் அவஸ்தைப் படும் பொழுது இதைக் கூறுவதினால் சிறிது ஆறுதலடைகின்றார்கள். இந்த தொனியை உச்சரிப்பதனால் மட்டுமே அவன் ஆறுதவடைந்தால் ஒழுங்காக இதை உச்சரித்து வந்தால் சாந்தமும் ஒழுங்கும் நம்மிடை ஏற்படும் என்பதில் ஐயமுண்டோ! ஸ்வாமி ராமதீர்த்தர் கூறியுள்ளபடி மூக்கினின்றும் சாதாரணமாக வெளிப்படும் ஸ்வாசத்திற்கு ஒருபதம் வேண்டு 'ச ஓ ஹம்' என்பதாகும். இதைக் கவனியுங்கள் 'ச ஓ ஹஅம் சமஸ்கிருத பாஷையின் இலக்கணம் மற்ற பாஷைகளைவிட பூர்ணத் தன்மை வாய்ந்தது. எல்லா தொனிகளும் வார்த்தைகளும் பூரணமாக ஆராயப்பட்டிருக்கின்றன. மகாரம் மெய்யெழுத்தெனப்படும். ஆனால் நாசி சம்பந்தப்பட்டவரை மெய்யெழுத்தும் உயிரெழுத்துப் போன்று தனியே இயங்கத் தக்கது.
'ஓ அ'' என்பன உயிரெழுத்துகள். 'சஹ' என்பன தனி மெய்யெழுத்துக்கள் தனி மெய்யெழுத்துகளை (உடலை) உதறிவிட்டால் நமக்கு கிடைப்பது 'ஓ அம்' இதுதான் 'ஓம்' மெய்யெழுத்துக்கள் இவ்வுலகில் நாமரூபங்களை குறிக்கின்றன. எல்லா நாமரூபங்களும் இயக்கங்களின் சேஷ்டைக் கருவியானாலும் அவற்றைத் தாங்கி நிற்கும் ஸ்திரப்பொருளாக அழியா வஸ்துவின்றி விளங்க மாட்டா. இப்படி தாங்கி நிற்கும் பொருள் தான் பிரம்மம். அதுவே 'அ உம்' என்ற தொனிகளால் விளக்குகின்றோம். இவ்விதம் சோஹம் என்பதில் 'சஹ' என்ற மெய்யெழுத்துகள் மாறுகின்ற நாமரூபங்களையும் இயற்கை தொனியாகிய “ஓம்'' என்பது அவற்றை தாங்கி நிற்கும் உண்மை பொருளையும் குறிக்கின்றது.

உவமானமாக வைரத்தை எடுத்துக் கொள்வோம். எல்வளவு உயர்வாக ஜ்வலிக்கின்றது, இரும்பினாலும் லகுவில் வெட்ட முடியாது; அவ்வளவு கெட்டி. பிறகு கரியை எடுத்துக்கொள்வோம். எவ்வளவு மிருதுவாய் இருக்கிறது. அன்றி அசங்கியமாகவும் தோன்றுகின்றது. வீணான உபயோகமற்ற வஸ்து. ஆனால் உண்மையில் இரண்டும் ஒரே வஸ்து. இரண்டும் 'கார்பன்' என்னும் பொருளே. ஆனால் அணுக்கள் ஒன்றில் ஒரு மாதிரியாகவும் மற்றொன்றில் மாறுபட்டும் காணப்படுகின்றது.

 

அதே மாதிரி நாமரூபங்களால் மாறுபட்டு தோன்றும் பலவித பிரிவுகள் உண்மையில் அவற்றைத் தாங்கி நிற்கும் மாறுதல் இல்லாததும் நித்தியமானதும் சலிப்பற்றதும் ஒப்பற்றதுமான வஸ்து ஒன்றிலேயே முடிவடையும். வித்தியாசங்கள், பிரிவுகள் தனிமைகள் என இவற்றைத் தாங்கி நிற்கும் சக்திக்கு சாதாரணமாக இயற்கையாகவே பொருந்திய பெயர் 'ஓம்' என்பதால் குறிக்கப்படும். உண்மையின் இயற்கைப் பெயரே இதுதான்.

 

உலகமும் தொனியும் ஒரு வஸ்துவுக்கு சமானம். இரண்டும் இருவித தன்மைகளே. பைபில் கூறுவதாவது "ஆதியில் இருந்தது வார்த்தை (தொனி), வார்த்தையும் கடவுளிடம் இருந்தது. வார்த்தையே கடவுளாயிருந்தது.'' இப்பொழுது உலக முழுமையும் குறிக்க ஒரு வார்த்தை வேண்டும். எல்லா பாஷைகளிலும் தொனி ஒருவிதம் தான், சில தொண்டையில் இருந்தும் சில அண்ணங்களில் இருந்தும் சில உதட்டினின்றும் வெளிக்கிளம்பும். எந்த பாஷையிலும் ஒரு தொனியும் தொண்டையின் கீழிருந்து உற்பத்தியாகாது. தொண்டையே தொனி கிளம்பும் பிரதேசங்களின் ஒரு எல்லை. மற்றொரு எல்லை உதடு. உதட்டின் வெளியி லிருந்தும் ஒரு வார்த்தையும் வெளிக்கிளம்பாது 'அகா' 'உகர' 'மகாரங்களில்' 'அ' தொண்டையிலிருந்தும் 'ம' உதட்டில் இருந்தும் (நாசி சம்பந்தமான) வரும் தொனிகள்; ஆகவே ஓம் என்பது இயற்கையில் பூர்த்தியாகும் ஓர் தொனி. ஆனால் இங்கு ஓர் கேள்வி. தாண்டையில் இருந்து அகாரத்தை போல எவ்ளவோ வார்த்தைகள் கிளம்பக்கூடும். அப்படியே மற்ற ஸ்தானங்களிலிருந்தும் வெவ்வேறு தொனிகள் கிளம்ப முடியும். என் இந்த மூன்றை மட்டும் எடுக்கவேண்டும் என்ற கேள்வி எழலாம். ஆனால் இந்த மூன்று மட்டுமே இயற்கையில் இலேசாக உற்பத்தியாவன. ஊமையிடமும் தொனிகள் கிளம்பும் ஆதலின் "ஓம்" என்பதைவிட பூர்த்தியான தொனி வேறில்லை. எல்லா பாஷைகளுக்கும் பொதுவான தொனி இதுவேயாம். ஹிந்துக்களின் தத்துவ முழுவதும் வேதாந்தமெல்லாம் இந்த ஓம் என்பதின் வியாக்கியானமே. தொனிகள் வர்ணாத்மிகம் தியானாத்மிகம் என இரு வகைப்படும். வர்ணாத்மிகம் என்பது எழுத்துக்கு வாக்கூடிய தொனி. இதற்கு எதிரிடை தியானாத்மிகம்; அதாவது உணர்ச்சி ஒன்றினால் மட்டுமே அறியக்கூடியது தியானாத்மிகம் எனப்படும். இது எழுத்து மூல மாய் விளங் காது. இந்த 'உணர்ச்சி' எல்லா பாஷைகளுக்கும் பொதுவானது. ஆனால் வர்ணாத்மிகம் அப்படியல்ல. இயற்கையான பாஷை எங்கும் அறியப்படும். அதேமாதிரி சங்கீதம் யாவராலும் அறியப்படுவது. அது உணர்ச்சி ஊட்ட வல்லது. வசீகரிக்கும் சக்தி வாய்ந்கது. ''ஓம்" என்ற தொனியும் உச்சரிப்பவரிடம் மனோதிடம் உண்டாக்கி தியான பலத்திற்கு வழி காட்டியாக நிற்கின்றது. தென் தேசீயக்கவி பாரதியாரும் "ஓம் சக்தி; ஓம் சக்தி ஓம்" என்று 'ஓம்'' என்ற மகாமந்திரத்தின் பெருமையை பாடியுள்ளபடி அதை நாமெல்லாம் தியானித்து உய்யும்படி ஆண்டவன் அருள் பாலிப்பாராக.  

 

ஆனந்த போதினி – 1936 ௵ - செப்டம்பர் ௴

 

No comments:

Post a Comment