Wednesday, August 26, 2020

 

ஆரம்ப ஆசிரியரும் அவர் தங்கடமையும்

 

ஆரம்ப ஆசிரியராயிருக்கப்பட்டவர்கள் எத்தேயத்தினராயினும், தத்தம் தேயத்திற் கேற்ப, தத்தம் தேயத்துப் பிற்காலப் பிரஜைகளாக வருபவர்களும், தம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்டவர்களுமாகிய குழந்தைகளை; தத்தமக்கு வேண்டிய ஆகராதி உடைகளையே விரும்பி வேண்டுபவராயிருப்பது போல், சத்தம் தோத்திற் கிணங்கவே தயார் செய்ய வேண்டியது நமது முதற்கடைமையாகுமென உணரவேண்டுவது அவசியமாகும்.

 

தற்போது நம்மவர்க்கு நம் மதத்தில் அருவருப்பும் அலக்ஷியமும் தோன்றவே, மதப்படிப்பு அவசியம் என உணரத் தலைப்பட்டிருக்கிறார்கள். ஆகவே, அதற்கேற்ப "சுதேசமித்திரனின்'' 29 - 11 - 1920 பிரசுரத்தில் பிரசுரித்திருக்கும், மத்திய ஆப்பிரிக்காவில் ம - ள - ள - ஸ்ரீ ஹி. எப் ஆண்ட்ரூஸ் என்பவர் சாந்திநிகேதன் ஆச்ரமத்தைப் பற்றிச் செய்த) உபந்நியாசத்தில் நித்திய கர்மங்களைப் பற்றி மட்டும் எனது ஆரம்ப ஆசிரிய சகோதரர்கள் கவனிக்குமாறு தொகுக்க விரும்புகிறேன். அவை பின் வருமாறு:

 

“இந்த ஆச்ரமத்திலுள்ள பிள்ளைகள் செய்து வரும் நித்திய கர்மங்களைப் பற்றிய ஒரு நாள் சரித்திரத்தை நீங்கள் கேட்பீர்களானால், அதன் உண்மையான பெருமை இன்னதென்று உங்களுக்கு வெளியாகும். அருணோ தய காலத்தில், பக்ஷிகள் தங்கள் கூடுகளிலிருந்து வெளிப்படுமுன் அந்த மாணவர்கள் தங்கள் நித்திரையிலிருந்து எழுந்து விடுவார்கள். தேவதாத் தோத்திர கீதங்களைப் பாடுபவர்கள் தாம் முதல் முதல் எழுந்திருப்பவர்கள். இவர்கள் இனிய கீதங்களைப் பாடிக்கொண்டு ஈச்வர தோத்திரத்துடன் அந்த ஆச்ரமத்தை அருணோதய காலத்தில் பிரதக்ஷணமாக வரு வார்கள். விடியற்கால வேளையாகையால் இந்த கீதம் வெகு தூரம் வரையில் கேட்கும்.

 

இதற்குப் பிறகு ஒவ்வொரு மாணவரும் தம்தம் ஆசனமாகிய சது ரக் கம்பளியை எடுத்துக்கொண்டு தோட்டத்திற்குள் போய் அதை விரித்து அதன் பேரில் சனிமையாக வீற்றிருந்து தியான பாலத்தை யடைவார்கள். பிறகு, தியான முடிந்தவுடன் எல்லோரும் எழுந்து ஒரு இடத்தில் கூடி, தேவதாதோத்திர கீதங்களைப் பாடுவார்கள். பிறகு பள்ளிக்கூடத்திற்குச் சென்று அங்கு வித்தியாப்பியாலம் செய்வார்கள், காலை 10 - 30 - மணி வரையில் பள்ளிக்கூடம் நடைபெறும். பள்ளிக்கூடத்திற்காகத் தனிக்கட்டிடம் கிடையாது. மாணவர்களும், உபாத்தியாயர்களும், ஆங்காங்குள்ள மரத்தடிகளில் உட்கார்ந்து விடுவார்கள். பெரிய பெரிய வகுப்புகள் கிடையாது. 8 அல்லது 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர். இந்த ஆசிரியர் இவர்களைக் கேள்விகள் கேட்டார். மாணவர்கள் பதிலுரைத்து வருவார்கள். அதிக பாட புஸ்தகங்களும் கிடையா. பிளேட்டோ சொன்னதைப் போல் கல்விப் பயிற், ஸம்பாணைகள் மூலமாகவே, உபதேச முறையாக, நடந்து வருகிறது. மாணவர்கள் தங்களுக்குண்டாகும் சந்தேகங்களைப் பிரசனைகள் மூலமாகத் தெரிவித்துக் கொள்ளுகிறார்கள். ஆசிரியர்கள் தங்கு தடையன்றி மிகுந்த பிரியத்துடன் பதிலளித்து அவர்களுக்குச் சந்தேகநிவர்த்தி செய்து வைக்கிறார்கள். இம்மாதிரியான கல்விமுறையில் மாணவர்களுக்கு அசிரத்தை யேற்படாது.

 

இதற்குப் பிறகு மாணவர்கள் ஸ்நானம் செய்து விட்டு போஜனம் செய்யப் போவார்கள். பிற்பகல் சுமார் 2 - மணிக்கு மறுபடியும் பள்ளிக்கூடம் தொடக்கமாகும். ஆனால் இப்போது கைத்தொழில் கற்பிக்கப்படும். இதில் ஒவ்வொரு மாணவரின் இயற்கையான சக்தியும் மனப்போக்கும் சீக்கிரத்தில் வெளியாகிவிடும். எனவே தச்சுவேலையோ, யந்திர வேலையோ, சித்திர வேலையோ, சங்கீதமோ, யார்யாருக்கு எதெதில் மனது பரவுகிறதோ, அத்து அவரவருக்குக் கற்பிக்கப் படுகிறது. பிற்பகலில் புத்தகபாடமே கிடையாது. மாலை 4 மணிக்கெல்லாம் பள்ளிக்கூடம் முடிந்து போகும். உடனே பக்கத்திலுள்ள பெரிய மைதானத்தில், கால் பந்து விளையாடப் போவதற்காக மாணவர்கள் மிக்க ஆவலாக ஓடுவார்கள். சாந்தி நிகேதனிலுள்ள மாணவர்கள் இந்த விளையாட்டுக்களில் கைதேர்ந்தவர்களென்ற இயாதி எங்கு முண்டு. பிறகு சந்தியா காலத்தில் மாணவர்கள் தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பி வந்து காலையில் செய்தது போல, மறுபடியும் தனித்தனியே ஆசனத்திலமர்ந்து, ஈசுவரத் தியானம் செய்வார்கள். இரவில் நல்ல படிப்பினைகளடங்கிய கற்பிதக் கதைகளும், நாடகங்களும் உபதேசம் செய்யப்படும். குரு தேவருடைய கவிகள் பாடப்படும். இதோடு பள்ளிக்கூட சம்பந்தமான கூட்டங்களும் நடைபெறும்.

 

இரவு 9 - மணிக்கு எல்லோரும் நித்திரைக்குப் போவார்கள். அதற்கு முன் ஒரு தரம் எல்லா மாணவரும் கூடி தேவதா தோத்திர கீதங்களைப் பாடுவார்கள். இம்மாதிரி காலங் கழிக்கும் மாணவர்களுக்கு சந்தோஷமும் இன்பமுமே மேலிட்டு நிற்கு மென்பதில் சந்தேகமே கிடையாது. எங்களது சாந்திநிகேதனிலிருக்கும் மாணவர்களைப் போல் ஸ்வதந்திர வாழ்வு படைத்தவர்கள் இந்தியாவிலேயே வேறொருவரும் இல்லையென்றே சொல்லலாம்.''


பரிமணப்பல்லவராயர்.  

 

ஆனந்த போதினி – 1921 ௵ - ஜனவரி ௴

 

 

 

No comments:

Post a Comment