Saturday, August 29, 2020

 ஓரற்புதச்  சந்திப்பு

 

அசுர வருக்கத்தினனான கம்ஸன் அரசனாய் வட மதுரையை - இராஜதானி யாக்கிக் கொண்டு உலகத்தை யாண்டுவருக் காலத்தில், அவனும் அவனைப் போன்ற அசுராமிசர்களான வேறு பலரும் புரிந்து வந்த அக்கிரமங்களைச் சகியாத பூமிதேவியின் வேண்டுகோளுக்கிரங்கிப் பூபாரந் தீர்க்க அவதரித்த கிருஷ்ணபகவான், ஒரு சமயம் ஆனிரைகளை யோட்டிக் கொண்டு போய் ஆயர்பாடிக்குச் சமீபத்திலுள்ள வனமொன்றில் மேய்த்துக்கொண்டிருந்தார். தன் பரிவாரங்களுடன் அந்த வனத்தையடைந்து சில நாள்களாக மிருக வேட்டை யாடிக் கொண்டிருந்த கம்ஸன், அன்று, தன் பிரதான மந்திரியை நோக்கி " நீர் நமது சேனைகளோடு நாடு போய்ச் சேரும்; நான் இங்குத் தனியே யிருந்து இவ் வனமுற்றும் சுற்றிவந்து இயற்கைக் காட்சிகளின் எழில் நலங்கண்டு, இன்று மாலை அல்லது இரவிற்குள் அரண்மனை வந்து சேருகிறேன். எனக்கு அவ்வெண்ணம் திடீரென்றுதித்தது; சேனைகளை ஜாக்கிரதையாக அழைத்துக் கொண்டுபோம் " என்று கட்டளையிட்டு விட்டு வனஞ் சுற்றத் தொடங்கினான்.

 

மாலைப் போதாஞ் சமயத்தில், பகவான் சிறு தூற்றலுடன் பெருமழை பெய்யுமாறு சங்கற்பித்து, ஆனிரைகளை வழக்கம் போல் தம் தம் விடுபோய்ச் சேர அனுப்பிவிட்டு, தாம் மாத்திரம் ஒரு சிறு கட்டுச் சோற்று மூட்டையும் கோலும் ஏந்தியவராய் ஆங்குள்ள தோர் மலைக் குகையொன்றில் தங்கி யிருந்தனர்.

 

வனவேடிக்கை பார்த்து வரும் கம்ஸ மகாராஜன் "ஓகோ! அந்திப்போது அணுகும் நேரத்தில் மழை பிடித்துக் கொண்டதே! தங்குமிடம்எங்கும் காணோமே! இப்போது நாம் செய்யத்தக்க கொன்றும் தோன்ற வில்லையே. வீணாக மழையில் நனைய நேர்ந்து விட்டதே. இப்படி வருமென்று முன்னமே தெரியுமானால் சேனைகளுடன் நாமும் வீடு போயிருக்கலாமே. " ஒன்றை நினைக்கிலது வொழிந்திட் டொன்றாகும்'' என்பது நம்மிடத்தும் பலித்துவிட்டதே " என்று எண்ணாதும் எண்ணி, பரபரப்பான நடையுடன் நாலா பக்கமும் ஓடலுற்றான். கடைசியில் கண்ணபிரான் தங்கியிருந்த குகையண்டை வந்து அவரை நோக்கி 'அப்பா! நானும் மழைநிற்கும் பரியந்தம் இங்கிருக்கலாமென்று வந்தேன்; கொஞ்சம் இடங்கொடுப்பாயா? " என்று கேட்டான்.

 

கண்ணபிரான் ஒருமாடு மேய்க்கும் பையனைப் போல் அழுக்குப் படிந்ததுண்டு ஆடையை யுடுத்திக் கொண்டு அங்கிருந்த படியால் அவர் அரசனைப் பார்த்து " என்னை ஏன் ஐயா கேட்கவேண்டும்? இது பொது இடம். எவரும் தடையின்றித் தங்கலாம். மழையிலேன் நனைய வேண்டும். வாஐயா என் அருகே" என்றார். கம்ஸனும் தங்கலானான். நம் கம்ஸ நிக்கொண்டன்றும் தேவருசிறிது நேரம் பொறுத்து, கம்ஸன் பையனை நோக்கி "இன்னும் மழைநிற்கக் காணோமே. வேட்டை யாடிய களைப்பால் பசி யெடுக்கின்றது. என்செய்வேன்'' என்று வருந்தினான். கண்ணன் "ஐயா! என்னிடத்தில் கட்டமுது இருக்கிறது. நானும் சாப்பிடலாமென் றிருக்கிறேன். வேண்டுமானால் அதில் கொஞ்சம் தருகிறேன் " என்றார். கம்ஸன் "அப்பா நீயாரோ எனக்குத் தெரியவில்லை. சிறுவனா யிருந்தாலும் புத்திசாலியாகக் காணப்படுகிறாய். பசிப்பிணி பொல்லாதது. ஆபத்துக்குப் பாபமில்லையல்லவா? நீயே அன்போடு என்னைச் சாப்பிடக் கூப்பிடும் போது நான் ஏன்தடை செய்ய வேண்டும். இந்த நன்றியை நான் மறக்க மாட்டேன்' என்றான்.

 

பிறகு இருவரும் புசிக்க உட்கார்ந்தனர். கண்ணபிரான் "இது வெறுந் தயிர் அன்னம். அவ்வளவு நன்றாயிராது. பசியைத் தணிப்பதற்கு எதுவானாலென்ன? கூச்சப்படாமல் சாப்பிடலாம் " என்ன, கம்ஸனும் "அப்பா! நீதயிர்ச் சோறு என்று கேவலப்படுத்திச் சொன்னாய். நான் இதைப் புசிக்கப்புசிக்க ஆசை மேலு மேலும் அதிகரிக்கிறதே யொழிய ஒரு சிறிதும் வெறுப்புத்தட்ட வில்லை. இப்படிப்பட்ட அன்னம் உண்மையாய் நான் இதுவரையில் புசித்ததேயில்லை. தேவாமிர்தம் ஒன்று உண்டு; அது தேவாகளுக்கே உரியது; அதை அருந்துவோர் இறப்பதில்லை யென்று சொல்லக் கேட்டிருக்கிறேன; அதுகூட இதற்கு இணையாகாதென்று நான் உறுதியாக உரைப்பேன். இத்தன்மையான அன்னம் சமைப்பவரும் இந்தப் பூமியிலிருக்கிறார்கள் என்பதை நான் இப்போது தான் கண்டேன். நீ யார் பெற்ற பிள்ளையோ அறியேன'' என்றான்.

 

கண்ணபிரான் ''நானா! இந்த ஊரில் இருப்பவன்றான். இதோ சமிபத்திலுள்ள ஆயர்பாடி தான் எங்களூர்; நான மாடாடு மேய்க்கும் இடைப்பையன; அதுவே தொழில்; மற்றபடி இப்படிப்பட்டவன் அப்படிப்பட்டவன் பாடியாகஎன்று புளுக எனக்குத் தெரியாது " என்றார்.

 

கம்ஸன்: "தம்பி! என்னவோ எனக்கு உன்னைப் பார்த்தவுடன் உன்மேல் அன்பு தோன்றுகிறது. என் சொந்த மனுஷியாளிடத்திலும் நான் இப்படி அன்பு கொண்டதில்லை. உன்னை என் உயிர்போல் பாவிக்கிறேன். காரணம் விளங்கவில்லை'' என்றான்.

 

கண்ணன்: - ''இவ்வாறு சிலரிடம் நமக்கு அன்பு உண்டாவது சகஜம்: சிலரிடம் வெறுப்புண்டாவது முண்டு. நீர் யாரோ? அறிய விரும்புகிறேன் "என்றார்.


கம்ஸன்: - "நானா? சொல்லுகிறேன். ஒரு விஷயம் உன்னைக் கேட்இத் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது - நீ ஆயர்பாடியிலிருப்பதாக அறிவித்தாயே; அங்கே கிருஷ்ணன் என்னும் பெயருடைய ஒரு பையன் இருக்கிறான். அவனை நீ பார்த்ததுண்டா?'' என்றான்.


கண்ணன். - ''ஐயா! உமக்கு ஆயிரம் நமஸ்காரம். அவனைப் பற்றி ஒன்றும் கேட்க வேண்டாம். அவன் பெயரையே எடுக்க வேண்டாம். நல்ல பிள்ளைகளைப் பற்றிப் பேசினால் பலனுண்டு. அடடா! அவனா என்று அவன் பேரைக் கூட நாங்கள் சொல்லுகிறதில்லை. போக்கிரித் தனத்தில் அவனை மிஞ்சியவர் எந்த உலகத்திலும் இருக்க மாட்டார்கள். செய்வதெல்லாம் துடுக்கு. முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடி போட அவனொருவனுக்குத் தான் தெரியும். அவன் எந்த வேளையில் தான் பிறந்தானோ; எப்படித்தான் தாய் வயிற்றில் பொறுமையோடிருந்தானோ அது கடவுளுக்குத் தான் தெரியும், சீ! சீ! அப்படியும் ஒரு பிள்ளை உலகத்தில் பிறக்குமா? நிமிஷத்துக்கு நிமிஷம் துடுக்குத்தனந்தான். அவனை நினைத்தாலும் கெர்ப்பங்கலங்குகிறது. அவன் சேஷ்டைகளைக் குறித்து அவனுடைய தாயார் தகப்பனாரிடம் சொன்னால் அவர்கள் கேட்பதில்லை. அவன்மேல் பிராணனை விடுகிறார்கள். அவன் பேச்சே வேண்டாம், அவன் என்னைப்போல்கான் இருப்பான். அவனைப் பார்த்தால் என்னைப் பார்க்க வேண்டியதில்லை என் வீண் பேச்சு. நானே அவன் என்று தீர்மானித்துக் கொள்ளும். நீர் யாரென்பதை தயவு செய்து தெரிவிக்க முடியுமா?'' என்றார்.


கம்ஸன்: - "நான் தான் உலகத்தை யாளும் கம்ஸ மகாராஜன். அவன் என் தங்கையின் பிள்ளை. அவன் என்னைக் கொல்லப் பிறந்திருப்பதாக தேவர்கள் - ரிஷிகள் முதலியோர் சொல்லுகிறார்கள். அவர்களுடைய கட்டுக்கைதகளை நானா நம்புகிரவன். எப்படியோ அவன் என்னிடத்திலிருந்து தப்பித்துக் கொண்டு ஓடிப் போயிருக்கிறான். அவன் ஆவியைப் போக்க நான் எத்தனையோ ராக்ஷஸ வீரர்களை அவனிடம் மாறு ரூபத்துடன் போகும் படி அனுப்பினேன். போனவர்கள் திரும்பவே யில்லை. ஆனாலும் ஒன்று ம்முழுகிப்போகவில்லை. கடைசியில் நான் தனுர்யாகம் ஒன்று செய்யப் போவதாகவும். அதற்கு அவனும் அவனுடைய அண்ணனும் வந்து போக வேண்டுமென்று அவனுக்கு வேண்டிய ஒருவனை அவனிடம் அனுப்புவதாகவும், அப்போது அவனைக் கொல்லுவதற்கு வேண்டிய சூழ்ச்சிகளைச் செய்யப்போவதாகவும் முடிவு செய்திருக்கிறேன். அவனை என்னவோ நான் லேசில் விடப்போவதில்லை. தக்க கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறேன்'' என்றான்.


கண்ணபிரான்: - இவற்றைக் கேட்டுத் திடீரென்று கம்ஸனுடையபாதங்களில் வீழ்ந்து தெண்டனிட்டு "மகாராஜாவா தாங்கன்? ஐயோ நான் தங்களை யாரோ ஒரு வழிப் போக்கர் என்று நினைத்து சாமானிய வார்த்தைகளால் தங்களிடம் பேசி அபசாரத்தைத் தேடிக்கொண்டேனே. நான் அறியாமற செயத பிழையை மன்னித் தருள வேண்டும்'' என்றார்.


கம்ஸன்: - அது பற்றிப் பாதகமில்லை. உன்னிடம் வைத்த அன்பை நான் ஒருபோதும் அலக்ஷியம் செய்ய மாட்டேன். மழை நின்றிருக்கிறது. போகலாமா?


கண்ணபிரான்: - ''மண்டலாதிபரே! தங்களுக்குக் கோடி நமஸ்காரம். தாங்கள் சொயத்தேசித்திருக்கும் தனுர் யாகத்திற்கு என்னையும் வரவழைக்கப் பிரார்த்திக்கிறேன். அந்த வேடிக்கையை நானும் பார்க்க ஆசைப்படுகிறேன்'' என்றார்.


கம்ஸன், "சந்தேக மென்ன? அவசியம் உன்னை வரவழைக்கிறேன். போவோம் காறு சொல்ல இருவரும் பிரிந்தனர்.

இது கர்ணபரம்பரையான சரித்திரம். இப்படி பாரதத்திலும் பாகவதத்திலும் விடுபட்டுப் போன சில கதைகள் ''அதிக கதா சங்கிரகம்" என்னும் புத்தக வாயிலாகச் சில வருஷங்களுக்கு முன் வெளிவரப் பார்த்திருக்கிறேன். இக்கதையினால் தெய்வ பலத்தின் முன் மனித பலம் சிறவாதென்பதே கருத்தென உணரலானோம்.

 

ஆனந்த போதினி - ௵ - மார்ச்சு ௴

 



No comments:

Post a Comment