Thursday, August 27, 2020

 

"எனக்கல்ல, பிறர்க்கே”

(தி. மு. ராஜகோபாலன்)

உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் சொத்து சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை பிருக்கத்தான் செய்யும். மனிதன் இந்த மண் மீது பிறக்கும்போதே இந்த ஆசையுடன் தான் பிறக்கிறான். சொத்துடைமையைக் கெடுதலென எந்த எலும், எந்த மதமும் கூறவில்லை. ஈயும், எறும்பும், தேனீயும் கூட தனக்கு வேண்டிய சொத்தைச் சேர்த்துக் கொள்ளுகிறது.

 

ஆனால் மனித கோடிகள் ஒரு விஷயத்தை மட்டும் கவனிக்கவேண்டும். தாங்கள் சேர்க்கும் செல்வம் சரியான வழியில் செலவழிக்கப்படுகின்றதா என்பதே. செல்வமே எல்லா மாகிவிடாது. ஒரு லக்ஷியத்தை அடைய செல்வம் ஒரு சாதனமாக விருக்கிறதேயன்றி அதுவே அந்த லக்ஷியமல்ல. நாம் கஷ்டப்பட்டு உழைத்ததின் பலன் தான் செல்வம்.

 

நமது வாழ்க்கை பெரியதொரு தர்ம சொத்தாகும். இந்த சொத்தைக் கடவுளே நம்மிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். உலகிலுள்ள சகல மதங்களும் இதைத்தான் சொல்லுகின்றன. நமது சரீரங்கள் ஆண்டவனின் ஆலயங்கள் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே கமது திறமையினாலும், அபாரசக்தி காரணமாகவும் நாம் உற்பத்தி செய்யும் பொருள்களையும், நாம் சேகரிக்கும் சொத்தையும், நாம் சம்பாதிக்கும் செல்வத்தையும் நம்முடைய சொந்த நன்மைக்காக உபயோகித்துக் கொள்ளக்கூடாது. நம்மிடம் உள்ளது பிறர் எவரிடம் இல்லையோ, பிறர் எவருக்குத் தேவையோ, அவர்களுக்கு அதைக் கொடுத்து விடவேண்டும். ''உயிரனைத்தும் ஈசன் கோவில்" என்பதை நாம் நினைவி லிருத்தவேண்டும். ஏழைகளிடமே கடவுள் வசிக்கின்றார். ஆகவே ஏழைகளுக்காக உழைப்பது தெய்வப்பணி யாகும்.

 

ஆகவே, நம்மிடமுள்ள சொத்தை நாம் பிறரது உதவிக்காகச் செலவழிக்காமல் சுயாலத்திற்காக உபயோகித்துக் கொண்டால் அதுதான் தீங்கு விளைக்கும். இதனால் நாம் பல கேடுகளை அனுபவிக்கிறோம். கணவனின் காம இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக மனைவி இருக்கிறாள் எனக் கருதப்படுமானால் அந்த வீடு வீடே யல்ல. அது விலைமாதர் வசிக்கு மிடத்திற்குச் சமமாகி விடுகிறது. மனிதன் ஈசுவரனால் தனக் களிக்கப்பட்ட எந்த விசேஷத் திறமையையும், புத்தியையும், சக்தியையும், தனது சொந்த நலனுக்காகப் பயன் படுத்திக்கொள்வது பெரும் பாவமாகும். பிறர்க் குழைக்கவே உடலெடுத்தோம் என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும்.

 

நாம் பிறர்க் குழைப்பதற்குச் செல்வம் இடையூறாக இருக்குமானால் அத்தகைய செல்வத்தை விட்டொழிக்க வேண்டுமென்றே மதங்கள் எல்லாம் கூறுகின் றன. இங்ஙனமே உயர்ந்த லக்ஷியங்களை அடையும் முயற்சிக்கு குடும்பம் தடை செய்யுமானால் குடும்ப வாழ்க்கையை விட்டு விடுவதே மேலானது. எவன் தனது இதயத்தில் ஆண்டவனை இருத்திக்கொள்ளுகிறானோ, எவன் பிறரையும் தன்னைப்போல பாவிக்கிறானோ, எவன் தனது உடலையும், சொத்தையும், தன்னிடமுள்ள யாவற்றையும், பிறர் சேவைக்கு அர்ப்பணம் செய்கிறானோ அவனே உத்தமன். அவனே அமரன்.

 

நம்மிடமுள்ள செல்வம் நம்முடையதல்ல; நம்முடைய சொந்த உபயோகத்திற்காக ஆண்டவன் அதை நம்மிடம் கொடுக்கவில்லை. இல்லாதவர்களுக்குக் கொடுத்து தவவே அது நம்மிடம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதை அறிந்து சடப்பவனே ஆண்டவனின் அன்புக்குப் பாத்திரனாகின்றான். “எல்லாம் எனக்கு'' என்ற எண்ணம் ஒழிந்து “எல்லாம் பிறர்க்கு" என்ற மனப்பான்மை ஒவ்வொருவரிடமும் உண்டாகவேண்டும்.

 

ஆனந்த போதினி – 1942 ௵ - டிசம்பர் ௴

 



No comments:

Post a Comment