Wednesday, August 26, 2020

 

அன்பு

(எம். நல்லப்பன்)

 

அன்பு எனப்படுவது மானிடர் எல்லாரிடத்தும் விளங்கும் சர்வ சக்திகளுள் மேலானதொன்றாகும். அன்பு இல்லாவிடின், கடவுள் பக்தி, இல்வாழ்க்கை, அமவாழ்க்கை, சமூக வாழ்க்கை முதலிய பல்வேறு அன்பின் ஊருணிகளும் அறவே யொழிந்து, மானிட வாழ்க்கையே மாறுபட்டு நிற்கும். இவ்வன்பானது மக்களுள் மட்டுமின்றி, மாக்களுள்ளும், புட்களுள்ளும்கூட பொலிகிறது. இவ்வன்பு மானிட வாழ்க்கையுள் எவ்வெவ்விதம் பிரவர்த்திக்கின்றது என்பதை சற்றே ஆராய்வோம்.

 

மனிதன் கடவுளிடத்தில் காட்டும் அன்பு பக்தி எனப்படும். இது
மற்றெல்லாவற்றையும்விட மேலானதும், இதர ஜீவராசிகளிடத்து அன்பு காட்ட அடிப்படையாகவும் விளங்குகிறது. கடவுள் பக்தி உள்ளவனிடத்தில் அன்பு எனப்படுவது கெதேசமாய் விளங்கும். தெய்வத்தினிடத்தில் அன்புள்ளவன் இதர ஜீவன்களிடத்து அன்புள்ளவனாய் விளங்குவான் என்பதினால் இவ்வன்பு உண்மையில் தெய்வத் தன்மைவாய்ந்த ஓர் சக்தியாகும். ன்னையும் இதர ஜீவ கோடிகளையும் படைத்த கடவுளிடத்தே அன்பினால் மேதை, மரியாதை, வணக்கம் முதலியவை காட்டுவதே அவரின் பேருபசாரத்திற்குக் கைம்மாறாகும்.

 

ஜன சமூகத்தில் தனிப்படில் சிநேகமென்றும் பொதுப்படில் சகோதரத்துவம் அல்லது ஜன் சமூக வாஞ்சை எனவும் படும். தனித்து வாழும் ஜீவனல்ல. எம்பிரான் அவனைப் படைத்த காலத்திலேயே இவ் வுணர்ச்சியைக் கொடுத்திருக்கின்றமையின் அவன் பலரோடும் சேர்ந்து வாழும் சிறந்த குணமுடையவனாக விளங்குகிறான். இதனால் பொது மக்கட்காக தேசாபிமானம் பூண்டு, தேசத்தாரின் முன்னேற்றத்தைக் கோரி பல்வேறு துன்பங்களை யம் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்ளுகிறான். இவ் விஷயத்தில் நம் தேசத்திற்காக உழைக்கும் மகாத்மாகாந்தி அவர்கள் ஓர் திருஷ்டாந்தமாகும்.

 

இல்வாழ்க்கையில் சதிபதிகளிடத்து விளங்கும் அன்பு காதல் என அழைக்கப்படும். இதனாலேயே அன்னவரை காதலன், காதலி என அழைக்கின்றோம். காதலன் தன் அன்பால் தன் மனைவி மக்களை நேசித்து அவர்களின் சுக துக்கங்களைத் தன்னுடையதே போல் பாவித்து அவர்களைப் பல விதத்திலும் துன்புறாமல் காக்கிறான்.

 

மக்கள் இதர ஜீவராசிகளிடம் காட்டும் அன்பே ஜீவகாருண்யமாம், ஜீவராசிகளிடத்தில் பாமர ஜனங்கள் நிகழ்த்தும் பாதகச் செயல்கள் ஜீவகாருண்ய முடையாரது நெஞ்சத்தைப் பெரிதும் வாட்டும் என்பது திண்ணம். ஜீவஹிம்சையைக குறைக்க பல பத்திரிகைகளும், கூட்டங்களும், தொழிலாற்றியும் இஃது குறைந்தபாடில்லை யென்பது விசனிக்கத் தக்கதே.

 

முடிவாக, அன்பர்காள்! நாமெல்லோரும் தெய்வத்தன்மை வாய்ந்த இவ்வன்பை நம் இனத்தாரிடத்தும், ஏனையோரிடத்தும், இதர ஜீவராசிகளிடத்தும் பூரண விருத்தி செய்து து கடவுளின் திருவருள் பெற்றுய்வோமாக.

 

ஆனந்த போதினி – 1938 ௵ - அக்டோபர் ௴

 

No comments:

Post a Comment