Wednesday, August 26, 2020

 இரணியன் மனமும் மாயவன் செய்கையும்



இப்புனித பூமியாகிய இப் பரத கண்டத்தின் கண் மானிடர்கள் அஞ்ஞானத்தாலுழலா வண்ணம் உலகிருளை நீக்கி, ஞானச்சுடர் விளக்கி, பல்லாயிர மாண்டுகளுக்கு முன்னரே ஸ்ரீய: பதியான சர்வேசுவரனுடைய கிருபாகடாட்ச வீட்சயன்யத்தால், உலகமுய்ய வேண்டுமென, ஒன்பது அவதார லீலைகள் நிகழ்ந்ததை வாசித்தும் கேட்டும், உணர்கிறோம் என்பதை யாவரும் மறுக்க இயலாது. அவ்வவதாரங்களுள் சிறப்புற்று விளங்காநின்ற ராமகிருஷ்ண நரசிம்ம அவதாரமும் முக்கியமென்பதும், அவ்வவதாரங்களே கம்பர் மனத்தினை கவர்ந்தவை என்பதும் யாவரும் அறிந்த விஷயமே. நாம் உற்று நோக்குங்கால், கற்போர் மனத்தினைக் கவரும் வண்ணம் சொற்பொலிவு, பொருட் பொலிவு ஒருங்கே யமையப் பெற்று அவதாரங்களினுள்ளும், கம்பர் காவியத்திலும் திகழக் காணலாம்.

 

கம்பர் தோன்றி வான் மட்டும் புகழ்வீசி, எட்டுணை சீரோடும் சிறப்போடும் வையமென்னும் தன் கையால் அணைத்து பேரின்பமென்னும் வானத்திருத்த ஞானமென்னும் நற்பாலூட்ட, தீந்தமிழ் அற்புத மழலையில் கிடைத்த, காதைகள் செய்தனரன்றோ!

 

இப் பேரின்பம் முற்காலத்திய அசுரர்களிடமும் தழைத் தோங்கியதை நாம் காண்கிறோம். இதற்கு மேற்கோளாக "இரணியன் மனமும் மாயவன் செய்கையும் " என்பதை சிறிது ஆராய்வோம். இரணியன் யார்? அவன் மனம் யாது? அவன் செய்கை யென்ன? இவைகளை யாராயுமிடத்து காதலர மலகம்போல வீடு பேறு இலங்கக் காணலாம். அசுர அரசன் இரணியன் தனக்குற்ற சாபத்தை யெண்ணி துவாரபாலக சேவையினின்றும் விடுபட்டு, அசுர அரசனாகப் பிறந்தமையால் அதிசீக்கிரமாக எப்படியாவது ஜீராப்தி நாதரின் அண்டையில் முன் பதவி பெறக் கருதியும், மூன்று அவதாரங்கள் எடுக்கும்படி க்ஷராப்திநாதருக்கு அசுரர்கள் கஷ்டம் விளைவித்தமையாலும், தான் நேரில் தரிசனம் கண்டு அசுரர்களின் இடுக்கண் களைய வெண்ணி மனமுருகி, நெடுநாட் செய்வகை யின்னதெனத் தோன்றாதவனாய் யோசனை செய்து, ஓர் வித முடிவிற்கு வந்தனன். யாதெனில்;


“மலைமிசைத் தோன்றும் மதியம் போல் யானைத்

தலைமிசைக் கொண்ட குடையார் – நிலமிசைத்

துஞ்சினாரென் றெடுத்துத் தூற்றப்பட்டா நல்லா

லெஞ்சினா ரிவ்வுலகத்தில்.”

என்றபடியும்,


 "படுமழை மொக்குளிற் பல்காலுந் தோன்றிக்

கெடுமிதோர் யாக்கை யென்றெண்ணித் – தடுமாற்றந்

தீர்ப்போம்.”

என்றபடியும்.


"வேதம் நூற் பிராயம் நூறு மனிதர்தாம் புகுவரேனும்

பாதியு முறங்கிப் போகும், நின்றதில் பதினையாண்டு

பேதைப்பாலகனதாகும் பிணி, பசி, மூப்புத் துன்ப

மாதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே.''

என்ற படியும்,

 

மலைமிசை தோன்றும் மதியம் போல, யானையின் மீது, அம்பாரிவைத்து, வெண்கொற்ற குடை கவிய பவனி வந்தும் நவரத்தின கஜிதங்க ளிழைத்த அரியணை மீது அமர்ந்து பூலோகத்திலிருந்து இந்திரபதவியை ஏற்றாலும், இறக்கிறார்களே யொழிய இறவாது எஞ்சியவர் யாவருமிலர். மழை நீரிலே தோன்றி அழியும் குமிழியைப் போல் பலமுறை, உண்டாகி யழியும் இயல்புடையது யாக்கை. இப் பிறவியால் உண்டாகும் மயக்கத்தைத் தீர்க்க, தவத்தால் ஆகாத காரியம் யாதுளது? வேதத்தில் சொல்லிய பிரகாரம் ஆயுளிருந்தால் பகவானை யடைய அநேக ஜன்மாக்கள் வேண்டும். எல்லா
ஜன்மாக்களிலும் இடையூறாக நிற்கின்ற பிணி, பசி, மூப்பு, தூககம், பேதமை இவைகளை இதே ஜன்மாவில் யாவற்றையும் கனைந்து ஊழியோர் பகலாயோதும் ஆண்டலாம் உலகமேழும் வீயுற்ற ஞான்றும், வீவின்றென நிற்க தவமேற் கொள்வானாயினன்.


"தன் உயிர் தான் அறப் பெற்றானை யேனைய

மன்னுயி ரெல்லாம் தொழும்."


"கூற்றங் குதித்தலுங் கைகூடு நோற்றலி

னாற்றல் தலைப் பட்டவர்க்கு."


என்று பொய்யில் புலவர் அருளிய வண்ணம் தவத்தால் மாயக்கடவுளை காண இயலும் (நமக்கு) எல்லாப் பொருள்களையும் நல்கி காத்த வருகிற பரம்பொருள், மாயவனை எப்பொழுதும் போற்றுகிறோமா? கடவுளைத் தெரிந்து வணங்க வேண்டுமே; அவரிட்ட கட்டளைப்படி நடக்க வேண்டுமே, மரக்கலத்தை யாதரவாகக் கொண்டு கடற்கரை யேதுகிறவரைப் போல, தவத்தை யாதாவாகக்கொண்டு இல்வாழ்க்கை கரையேற வேண்டுமே, உயிரை இனிய உயிராக ஆக்க வேண்டுமே இம்மையிற் கடவுளை கண்ணுற்று மறுமையிற் துவாரபாலக சேவையில் அமர்ந்து பேரின்ப மெய்த வேண்டுமே. தான் மட்டிலு மல்லாது ஏனைய உயிர்கட்கும் உய்திற மேற்படுத்த உண்மைக் கடவுளை யறிந்தா லல்லாது, இயலாதென்று நான் முகன் வாயிலாக வேதப்பொருளை யோதி உணர்ந்து, விண்டு, ஆரியர் மெய்யறிவுணர்த்திய முதையே, சில் கான்மறைப்படியும், எண்ணில் ஆகமத்தின்படியும், துறக்கும் வாயுவை உணவாகக்கொண்டு, நிராசனனாகி, இந்திரியங்களை மடக்கி, வேதப் பொரு எல்லாது வேறு ஒன்றையும் கருதாமல் மனதை யடக்கி, நியமம் வழுவாமல் தவத்தை நடாத்தினன்.


“நீரிற்சாகிலன் நெருப்பினுஞ் சாகில னிமிர்ந்த

மாருதத்தினு மண்ணின் மற்றெவற்றினு மாளான்

ஓருந்தேவரு முனிவரும் பிறர்களு முரைப்பச்

சாருஞ்சாபமு மன்னவன் றனைச் சென்று சாரா.''


''உன்னிற் சாகிலன் புறத்தினுஞ் சாகில னுலவாக்

கொள்ளைத் தெய்வவான் படைக்கலம் யாவையுங் கொல்லா

நள்ளிற் சாகிலன் பகலிடைச் சாகிலன் மனார்

கொள்ளச் சாகில னாரினி யவனுயிர் கொள்வார்.''

 

என் வரங்கள் பல வாங்கவேண்டும்? பிறவிப் பிணியை நீக்கக் கருதியா? மாயவன் தரிசனம் காணக் கருதியா? அசுரனின் மன நிலை விளக்கக் கருதியா? அசுரனின் மன நிலை விளக்கப் புகுந்த கம்பர் வெகு அழகாக சித்திரித்திருக்கிறார். பல ஜன்மங்களில் ஏற்படும் இடுக்கண் களைந்து, பதவிகளை யேற்காமல் தடுத்து உண்மைக் கடவுள் மாயவனை நேரில் கண்டு, தானும் பிறரும், பிறந்து, பிறந்துறும் பெருந் துன்பத்தை யகற்றவன்றோ? உலக ரக்ஷகனாகிய மாயவனல்லாது பிறவிப் பிணியைத் தாண்ட இயலாதென்பதை தமது குலத்துள்ள அசுரருக்கும் தமது சந்ததியாருக்கும் உலகினருக்கும் நிலைநாட்டி, பேரின்பத்தை யடைய வேண்டியே!

 

முன் மூன்று அவதாரங்களால் அறம் தலை நிற்க, வேத நீதியை நிலைநிறுத்த திறம் தெரிந்து உலகம் பூண செந்நெறியின்கண் செலுத்த வதைக்கப்பட்ட அசுரனின் திறன் தெரிந்து தானவ்வாறு நடவாமல் தனது சந்ததியாருக்கும் எனையோருக்கும், குலத்தவருக்கும், பேரின்பத்தை யளிக்கக் கருதியே வரங்கள் பல பெற்றனன் போலும். நீர், அக்னி, காற்று இவைகளால் இறந்தால் துர்மரணம் மும்மூர்த்திகளாலும் அவர்களின் படைக்கலன்களாலும் இறந்தால் பதவிகளும், வீர சுவர்க்கமும், முனிவரின் சாபத்தால் பற்பல விதமான அநேக ஜன்மாக்கள் சாபவிமோசனம் வரை யெடுக்கவேண்டி வரும்.
வரங்கள் யாசித்து ஆயுளை மிகைப்படுத்திக் கொள்ளா விட்டால் அநேக ஜன்மாக்களுண்டு. சிலர் வியாதி, இடி, பைசாசம், இராஜீ, தெய்வீகங்களாலும், பீடிக்கப்பட்டு அல்லல் உறுவதுண்டு. பகலிரவு உள்ளும் வெளியும், ஆகாயம் பூமி யென்றும், என் கேட்கவேண்டு மெனின் தன்னை யறியாமல் ஒரு காரியத்தில் பிரவேசித்திருக்கும் பொழுதாவது, தூங்கும் பொழுதாவது, மாயமாக எந்த இடத்திலாவது தன்னை வதம் செய்யாமல் தனக்கும் குலத்தவருக்கும். எனையோருக்கும் மாயவனின் தரிசனம் காணச்செய்து சந்தோஷிக்க இந்த வரங்களல்லாது, வேறு எதனால்? இரணியனின் மட்டற்ற மகிழ்ச்சியை நாம் ஆராய்வோம்.

 

கர்ணன், பீஷ்மர் இருவருக்குப் போர் நடக்கும் பொழுது (பாரதப்போரில்) போரை நிறுத்தி நேரிற் சென்று சதுர் புஜத்தோடும் சேவை தரவில்லையா? விதுரன், அக்குரூரர், துருவன் முதலானவர்களுக்கும், ஜாதிமதம், பர்வம் காணாது நேரிற் சென்று சதுர்புஜத்தோடும் சேவை தரவில்லையா? என்னே மாயவனின் விந்தை! பரந்தாமனின் வரவை வெகுகாலம் வரை எதிர் பார்த்திருந்த இரணியன் வெகுண்டு, இறுதியாகப் பள்ளியில் பால பருவமுதல் அதிலும் படிக்க ஆரம்பமாகு முதல் தழைத்தோங்கும்' அஷ்டாக்ஷர மென்னும் நாமா அஷ்டாக்ஷர மென்னும் விதத்தில் நல் வினையென்னு மரமாக நாரி, வீடு அடைதல் என்னும் வேட்கை வேரூன்றி, பக்திகளாகிற கவடுகள் விட்டு, நற்குணமென்னும் பூபூத்து, பதவி யென்னும் காய் காய்த்து, பேரின்பம் என்னும் பழம் சொரியச்செய்யும் நாமா, மனப்பக்குவமாகும் வரை நாவை விட்டு அகலாத நாமா பள்ளியில் நல்கும் வரை வெளி வரார். அதனை நிறுத்தி தனது நாமா நிறுவ தனது ஆணையை எல்லாப் பள்ளியிலும் நிலை காட்டினான்.

 

இனி உலகம் தளரும் உய்யும் மார்க்கமில்லை. ஒவ்வோர் துறையிலும் மாயவனின் தரிசனம் காண விரைகின்றான். பள்ளியிலும் பாலர்களிடையே பாலர்களறியாது நாவினால் புலரும் அஷ்டாக்ஷர தாரகமந்திரம் நீக்கப்படாதென அறிந்து, மாயவன் உண்மை கண்டும், நிதானித்து, இராவணனின் பக்கலில் வீபிஷணனும், கம்ஸன் பக்கலில் அக்குரூரரும், துர்யோதனன் பக்கலில் துரோணர், பீஷ்மர், விதுரர் முதலானவர்களை யேற்படுத்தி நீதிபோதனை செய்ததைப்போல, பள்ளியில் நீதி தவறிய இரணியன் பக்கலில் பிரகலாதனை வைத்து பள்ளியை ஆதியாகக்கொண்டு சேவைதர முற்பட்டனர் போலும்.


“ஓ நமோ நாராயணாய வென்றுரைத்துள முருகித்

தானமைந்திரு தடக்கையும் தலையின் மேற்றாங்கிப்

பூ நிறக் கண்கள் புனலுக மயிர்புறம் பொடிப்ப

ஞான நாயக னிருந்தன னந்தண னடுங்க"

 

என்று கம்பர் பெருமான் பாடியபடி முறைப்படி பள்ளிக்குச் சென்ற பிரகலாதனுக்கு சண்ட மார்க்கன் வழக்கம் போல் "இரண்யாய நம'' வென்று போதித்தான். ஆதி பரம்பொருள் ஆலிலையில் கண் வளரும் பிரம்மம், உலகங்களை விளை யாட்டாக படைக்கும் கடவுள், உலகங்களை எவ்விதம் பரிபாலிப்பது மென்பதையே யோசிக்க யோக நித்திரை செய்யும் க்ஷராப்திகா தன் வேதத்தின் இறுதிப் பொருள், உத்தம கதியை உய்யும் வழியை எய்யும் நாராயணர், பிரகலாதன் மனத்திலே ஊக்கத்தை அளித்து பேரின்ப ஊற்றை சுரக்கச் செய்து இரணியனால் இடை யூ றடைந்த தாரக பள்ளியில் ஊர்ஜிதமாக்கக் கருதி பிரகலாதன் நாவில் தங்கினார். திடுக்குற்ற பிரகலாதன் தகப்பனாரின் நாமாவுக்குப் பதிலாக சிரமேற் கரங்குவித்து, அஞ்சலி செய்து, தேகம் புளகிக்க, சரீரம் விம்ம, மயிர் கூச்செறிய, கண்களிற் ஆனந்த பாஷ்பம் பெருகி அருவி ஆறாகவோட, மனத்தால் தியானித்து நாவி
னால் ஓம் நமோ நாராயணாய' என்னும் தாரக மந்திரத்தைக் கூறினான்.

 

அரிய தவமியற்றுவார் யாருமிலரென்று இயற்றிய இரணியனுக்கு சேவை தராமல் நேர்மாறான நிலையிலல்லவா மாயவன் செய்கை செய்யக் கருதினன்போலும். எவ்வளவு சிரமம் எடுத்துக் கொண்டும் அவ்வளவும் வீணாகி, எள்ளளவும் பயன் படாதது கண்டு, சண்ட மார்க்கன் வேந்தன்பாற் சென்று “வேந்தே! பிரகலா தன் மனம் மாயா விநோத நிலையில் நிலைத்திருக்கிறது. அதனைச் செப்ப நா எழாமல் உள்ளம் பதைத்து நடுங்குகிறது. வழக்கம் போல உமது நாமாவை உச்சரித்தேன். அதனைச் செவிக் கொள்ளாமல் 'வேதம் ஓதாம லறிவேன். அறிந்தாலும், நினைத்தாலும், கேட்டாலும், சொன்னாலும் துன்பக்கடலை கடப்பது உரியது. 'ஓம், நமோ நாராயணாய' என்று இயம்புகிறான்' என்றனன்

 

அரியணை மீது அமர்ந்து தேவர்கள் குற்றேவல் செய்ய சதா சம்சன் கிருஷ்ணனை நினைத்ததைப் போல், எப்பொழுது காட்சி யளித்து மீட்சி தருவாரோ வென்று நினைத்திருக்கின்ற இரணியன் செவியில் புகுதலும், ஆகாய மளாவி குதித்து, தன்னை மறந்து, ஆடிப் பாடி, 'என்னையன்றி இரு நிலத்தில் பிறந்தோரில் யார் பெற்றார்? ஏனையோரால் நன்மை தீமையில்லை. நாராயணரை எனது பெருங் கோயிலில் அவதரிக்கச் செய்து தரிசனம் கண்டு திருபுயத்தால் தீண்டப்பெற வேண்டுமென வெண்ணி பிரகலாதனை அழைத்துவர கட்டளை யிட்டனன். தன் முன் பாதம் பணிந்து நிற்கின்ற தன்மகனை கட்டி யணைத்து பக்கத்தே விருத்தி 'உபாததியாயரிடத்தில் சொன்ன சொல் யாது என் முன்னிலையில் கூறு? யான் கேட்க வேண்டு மென்றான் பனைத்தோள் வீரன்.


"காமம் யாவையுந் தருவது மப்பதங் கடந்தால்

சேம வீருறச் செய்வதுஞ் செந்தழன் முகந்த

ஓம வேள்வியி னுறுபத முய்ப்பது மொருவன்

நாம மன்னது கேண்மோ நாராயணாய"

 

தன் முன் கூறாது உபாத்தியாயரின் முன்னிலையிற் கூறியதற்கு மனம் வெதும்பி மறு முறையம் சொல்லச் செய்ததின் கருத்து யாது? வேந்தன் மனய தான் என்னே? அரிய தவமியற்றி வரங்கள் பல பெற்று அல்லும் பகலுமாக சேவைக்கு காத்திருக்கும் வேந்தனுக்குக் கொடாமல் அவன் வம்சத்தில் அவன் புதல்வனுக்கு தனது நாமாவை யுரைத்த மாயவன் செய்கை தான் என்னே! வானவரையம், கூற்றுவரையும், நான்முகனையும், செஞ்சடையானையும் கடந்து அவர்களின் படைக்கலன்களையும் கடந்து தரிசனம் காண மனத்தின்கண் உதித்த வரமெல்லாம் யாசித்து, ணத்திற்கு மாறாக
நடக்காவண்ணம்) மாயவனை நேரில் காணக் கருதிய வேந்தனுக்கு கேர் மாறான செய்கையில் மாயவன் நடாத்தியது விந்தையினும் விந்தையே! அஷ்டாக்ஷர மந்திரத்தை மறுமுறை நேரில் செவி சாய்த்த வேந்தன், சம்சார சாகரத்தின் ஊழ்வினையாகிற சுழலினின்றும் கரையேற நன் மரக்கலமாகிறதும் எவ்லோருக்கும் கிடைப்பதற்கு அருந்தனமும் ரிஷிகளாலும் முன்னோர்களாலும் கடைந்தெடுத்த மெய்ப்பொருளாகிய குலதன அவிழ்தமு மிதுவே.


"அற்றை நாண் முதல் யானுள நாள் வரை யப்பேர்

சொற்ற வாயையுங் கருதிய மனத்தையுங் சுடுமென்

ஒற்றையாணை மற்றியா ருனக்கிப் பெயருரைத்தார்

கற்றதா ரொடு சொல்லுதி விரைந்தெனக் கனன்றான்”

 

ஆற்றுமணலை எண்ணினாலும் எண்ணலாம், நம்முடைய குலத்தில் தோன்றிய அசுரர்களை இரண்டு அவதாரங்கள் எடுத்து அழிக்கவில்லையா? உடன் பிறந்த இரணியாட்சனை மூன்றாவதாக வராக அவதாரமெடுத்து வதம் செய்யவில்லையா? மீன், ஆமை, வராகம் முதலிய ரூபமாக நினைத்த மாத்திரத்தில், நினைத்த விடங்களில், இமைப்பொழுதில் எடுத்து மறைந்திருக்கிறார்.

எனது ''பிதிர் அசுர ஜாதியுண்டான நாள் முதல் அதிலும் தமையனை வதைத்த நாட்முதல்
அசுர ஜாதியாரையும் வம்சத்தவரையும், சுடுமென நான் பிறந்து, குலத்தவரை யழிக்காமல் குலத்தவருக்கும் வம்சத்தவருக்கும் தரிசனம் தாவரங்கள் பெற்றுள்ளேன். அசுரர்களின் நிமித்தமாக இம்வாயவன் அவதரிப்பதை (தனக்குப் பிற்காலம்) தடை செய்வேன் என வெண்ணி பிரகலாதனைப் பார்த்து 'தந்தையெப்படி மைந்தனப்படி' என்றபடியிராமல் நீயேன் எனது பெயரை உச்சரியாமல், நாராயணர் பெயரை உச்சரிக்கின்றாய்? “பிதிர் தேவோபவா" என்று நீ கற்ற வேதம் முறையிடவில்லையா? முத்தொழில்களையுடையது எந்த வேதத்தின் சம்மதமென்று தேறினாய்? ஆதியந்தமிலாத அளவிறந்த உலகங்களிலும் வேதம் எந்த மார்க்கமோ? அந் நன்மார்க்கத்தை கடைபிடித்து நல்வினை செய்தவர்கள் மேம்படுவார்கள் என்பது உண்மையாம்' என்று உலக நடையாக வினவி, மேலும் 'நீ இளம்பிள்ளை; சொன்ன சொல்லினின்றும் மாறினாலும் மாறுவாய் பிழை பொறுத்தேன்' என நவின்றான்.


''உரையுள துணர்த்துவ துணர்ந்து கோடியேல்

விரையுள வலங்காய் வேத வேள்வியின்

கரையுள தியாவருங் கற்குங் கல்வியின்

பிறைபுள தென்பது மைந்தன் பேசினான்."

 

எவ்வளவு சோதனை செய்தும் பிரகலாதன் தன் மாசிலா திருமனத்தால் வேதமாகிய கடலுக்கு கரையாயும், வேள்விக்கு பயனாயும், எல்லோராலும் கற்கும், கற்கப்படும் கல்வியாகிய பாலுக்கு பிறைபோலு மிருக்கிறது 'ஓம் நமோ நாராயணா' வென்னும் திருவருமலையான் நாம; காரணம் காரியம் என இரண்டினுள் ஒன்றை ஒன்று பின்பற்றி பிரளய காலத்தில் உலகம் யாவையும் தம்மு எடக்கியும் உற்பவிக்கப் பண்ணியும் இரண்டறக் கலந்து கிற்கும் ஆதியந்த மிலாதவருடைய மகிமையை நாவினால் சொல்ல இயலுமோ? சர்வஞ்ஞரை வேத விளை பொருளை வேதத்தின் நிதியை, தூயோனை, மையார மழைவண்ணனை, கையாழியனை, பையாடரவிற் றுயிலும் பானை, கருணாகரனை, வேதமே அறியேன் என்று சொன்ன மந் நாராயணரின் பெருமையைக் கூறிடப்போமா? சிறிதும் அச்சமின்றி சந்தோஷ பரிதனாய் கூறிய அஷ்டாக்ஷரத்தின் மகிமையை கேட்டுணர்ந்து எட்பொழுது பகவானின் ரூப குணங்களை யுரைத்தானோ மாயவன், பிரகலாதனின் காரக சித்தத்தை சோதித்து நாராயணர் பக்தனை கைவிடார். பிரகலாதனையும் ஓர் பக்தனாகவே அமைத்துக்கொண்டதை (வெளியிட வேண்டியதையும்) ரூபிக்க நீர், அக்னி, யானை, விஷம், மலை இவைகளின் மூலமாக பல அல்லலுக்கு உட்படுத்தினான் பிரகலாதனை இரணியன். மாயவன் தன்னை மாயவனாகவே யாக்கக் கருதி ஒவ்வோர் துறையிலும் சமயத்திலும் ஒவ்வொன்றிலும் இடுக்கண் உறாவண்ணம் பல சோதனைகளிலும் இரட்சித்து காத்து, பிரகலாதனிடம் தாண்டவமாடுவதை நிரூபித்தார். சிறிதும் துன்புறாது சோதனைகளை கடந்த பிரகலாதனை தானும் தன்னைச் சூழ்ந்தவனும் கண்டும் கேட்டும் ஆனந்திக்குமாறு தன்பால் கொண்டுவர ஆக்ஞையிட்டனன் இரணியன்.


"மூன்றவன் குணங்கள் செய்கை மூன்றவ னுருவமூன்று

மூன்று கண் சுடர்கள் சோதி மூன்று தன் னுலகமூன்று

தோன்றலு மிடையூறுந் தொடங்கிய பொருள்களெல்லாம்

சான்றவ னிதுவேத முடிவது சரதமென்றான்.”

பகவானின் நாமாவையுரைத்த பிரகலாதன் மூன்று லோகத்திற்கும் சாட்சி பூதனாகவும் முத்தொழில் உடையவராகவும் மூன்று ரூபங்களாக கோயில் கொண்டு, சந்திரன், சூரியன், அக்னி, இவைகளை நேத்திரங்களாக அமைத்து கினோர் உலரில் செய்யும் காரியங்களை கண்ணுறுகிறான் நாராயணன்.

 

மேலும் அர்ச்சா ரூபமாகவும் கோயில் கொண்டிருப்பதைக் கண்ணான் திருவடியைக் கண்டு ஆதரவு பெருகி கையால் தொழுது, காலால் வலம் செய்து, புகழ்களை நாவினால்பாடி, ஆனந்தம் கண்டு களிக்க, பெரும் கருணை படைத்து விளங்காநிற்கும் நாராயணரே யொழிய ஒருவரையும் நம்புகிலேன். பின் ஒருவரையும் பின் செல்லேன். இதுவே வேதத்தின் முடிவான பிரமாண மென்றான்.


"சாணினு முளனோ தன்மை யணுவினுச் சத கூறிட்ட

கோணினுமுளன் மாமேரு குன்றினுமுள னிந்தின்ற

தூணினுமுளன் சொன்ன சொல்லினுமுள னித்தன்மை

காணினுதி விரைவி னென்றா னன்தென கனகன் சொன்னான்.''

 

பக்தவத்ஸல பராதீனனான பரந்தாமன் பக்தன் வாயிலாக தான் அவதரிக்க வெண்ணி எந்த ஸ்தலத்தை எப்பொழுது குறிப்பிடுவானோ வென்று வருமுன் காப்பவனாகி உலகத்திலுள்ள எல்லாப் பொருளினுள்ளும் பூர்ண அவதாரம் செய்தார். இரணியன் மனப்படி இரணியனைத் தவிர மற்ற அசுரர்களை வதம் செய்யாமல் அரண் மனையிலேயே அவதரிக்கவும் கரலோகத்திலுள்ள நார்களுக்கு சிம்மமாகவும் தன்னைத் தவிர வேறு தெய்வங்கள் இல்லை யென்பதை நிலைசாட்டவும் உயிரற்றதிலும் உயிருண்டு என்பதை நிரூபிக்கக் கருதி 'தூணிலு முளன்" அடியார்களின் கண்களுக்கு எங்கணு முளன் தோட்ட தொட்ட இடந்தொறும் தோன்றுவான் என்றும் பிரகலாதன் வாயிலாக வெளிவந்தார்.

 

கம்பர் தமது மேன்மையான கருத்தை நிலைநாட்ட துவாரபாலக சேவையினின்றும் விலகி அசுர மரபிலுதித்தவன், அனே: வரங்களைப் பெற்றவன், மீண்டும் துவாரபாலக சேவை பரிய போவாக் கொண்டவன், வம்சத்தவரையும் குலத்தவரையும் பேரின்ப மடையும் படி செய்ய எண்ணங் கொண்டவன். பக்கத்தே நவரத்தின கஜி தங்களாலே இழைக்கப்பட்டு மாமேரு குன்றைப்போல் தாங்கி நிற்கின்ற, சுட்டிக் காட்டிய தூணை கையால் அறைந்தான் என்றார். கையால் அறைய தூணை நோக்கி விரைந்து ஆர்வத்தோடு சென்று அறைந்த மாத்திரத்திலே, முன் பதவியில் சேவை தந்தது போல் சதுர் புஜங்களோடும் சேவை தருவாரென்று வெண்ணியிருந்த இரணியன் ஏமாற்றமடையும்படி மிருகேந்திர வதனமும் நரேந்திர உடலுமாக அவதரித்தார். ஹரியை முன் பதவியில் கண்டு களித்ததைட்போல் காணக்கருதியது வீணாகி நரசிம்மமாக அவதரித்ததைக் கண்டு உள்ளம் கவர்ந்தெழுந் தோங்கும் கோபவாய்ப்பட்டு, பக்கத்தேயிருந்த அசுரர்களை யேவாமல், மறு ஜன்மாவிலாவது சதுர் புஜத்தோடும் சேவை காணக் கருதி, தானே மாயவனின் சரீரத்தை நாயக நாயகி பாவமாகத் தழுவி பதம் பெற்றனன். இதனால் மாயவன் செய்கையையும் இரணியன் மனத்தையும் ஒருவராலும் காண இயலாத தென்பது விளங்குகிற தல்லவா!

ஆனந்த போதினி – 1936 ௵ - அக்டோபர் ௴

 

No comments:

Post a Comment