Tuesday, August 25, 2020

 

அருணகிரிநாதர்

(K. V. நாகமாணிக்கம்.)

''வாக்கித்க்கிற் கருணகிரி'' எனப் பலரும் பாராட்டிக் கொண்டா இம் இவ்வருணகிரியாரின் வாக்கின் வளமும், பாக்களின் பொருள் அழகும் வியக்கத் தகுந்ததாகும்.

இவரது சரித்திரத்தை ஆராயப்புகின் பலர் பலவிதமாகக் கூறுகின்றனர்.
இவர் காலம் சுமார் ஐந்நூறு ஆண்டுக ளிருக்கும். அதாவது அதாவது கருநட வேந்தன் என்று சொல்லப்படும் பிரபுட தேவராயன் என்னும் அரசனுடைய காலமென் று இவர் பாடிய திருப்புகழால் அறியலாம். இவருடைய உறைவிடம் வட ஆற்காடு ஜில்லாவிலுள்ள திருவண்ணாமலை. சைவசமயத்தில் தேவகணிகையர் குலத்தில் பிறந்தவரென்பது ஒரு சாராரின் கூற்று. மற்றெரு சாராரின் சொல்பம் இவர் ஒரு செட்டியாருக்குப் பாத்தை மாதிடம் பிறந்தவரென்று சொல்லப்படுகின்றது. சிலர், இவரைப் சிலர், இவரைப் பட்டினத்தடிகள் குமாரர் என்று சொல்கின்றனர். இவருடைய இளமைப் பருவத்தைப் பற்றி ஒருவரும் ஒன்றும் கூறியதாகத் தெரியவில்லை. இவர் தன் ளமைப் பருவத்திலேயே தம் தாய் தந்தையரை துறத் தனராதலால், இவருடைய “ல்வி வளர்ச்சிக்கு இடமின்றிப் போய்விட்டது. அதனால் சிறு பருவத்திலிருந்தே தம் சகோதரியின்
வீட்டிலிருந் ததாகக் சொல்லப்படுகின்றது. அவ்வமயம், இவர் தான்தோன்றி யாகவம், ஸ்திரீ லோலராகவு மிருந்தார். மேலும் இவர் பெண்கள் விஷயத்தில் பெரும் பணத்தைச் செலவு செய்தார். தன் சகோதரியிட மிருந்து பணம் வருவாய் குறை ததினால், இவர் இவ்வுலக வாழ்க்கையை வெறுத்து தற்கொலை புரிந்து கொள்ள எண்ணி, ஒரு கோபுரத்தின் மேலேறி பல தடவை கீழே விழுந்தும் இவருடைய எண்ணம் ஈடேறவில்லை. இவர் கடைசி முறையாக கீழே விழுந்தபோது முருகபிரான் ஒரு பிராமண வடிவு கொண்டு இவர் முன் தோன்றி சில உபதேசங்களை இவருக்கு உபதேசித்து ''எம்மைப் பாடிக் கொண்டிரும்" என்று சொல்லிவிட்டு மறைந்தார். இதனை,

“சின்னங் குறித்தடி யென்செவி நீயன்று கேட்கச் சொன்ன

குன்னங் குறிச்சி வெளியாக்கி விட்டது கோடு குழல்

சின்னங் குறிக்கக் குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை

முன்னங் குறிச்சியிற் சென்று கல் யாண முயன்றவனே.”

 

என்ற கந்தரலங்காரச் செய்யு (24-வது பாட்டு) ளால் அறியலாம்.

இதன் பிறகுதான் இவர் கந்தரலங்காரம், கந்தரனுபூதி, திருவகுப்பு, வேல்விருத்தம், உடற்கூற்று வண்ணம் முதலிய நூல்களை இயற்றினார்.

இவர் காலத்தில் திருமுனைப்பாடி நாட்டிற் சனியூரிற் பிறந்த பெரியாழ்வார் என்று சொல்லப்பட்ட வில்லிபுத்தூரார் என்னும் வைணவ அந்தணர் ஒருவரிருந்தார். இவர் ஒவ்வொரு புலாரையும் தம்முடன் தன்னிடம் தோரறால் அவர்களின் காதைக் குடைந்து குறும்பி வெட்டி விடுவார். ஒரு சமயம் இவர் அருணகிரியாருடன் போட்டி இட நேரிட்டது. அவ்வமயம்,

“திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத் திதா

திதத்தத்தத் தித்ததி தித்திதத்த தேதுத்து தித்திதத்தா

திதத்தத்தத் தித்தத்தை தாததீ தேதுதை தாததத்து

திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே.”


என்று அருணகிரியார் பாடிய பாட்டிற்கு வில்லிபுத்தூரார் பொருள் கூற முடியவில்லை. அதனால் தான் தோற்றதாக ஒத்துக்கொண்டு, அன்று இருந்து மற்றைய புலவர்களின் காதைக் குடையவில்லை யென்று பிரமாணிக்கம் செய்தார்.

மற்றொரு சமயம், திருவண்ணாமலையி லிருந்த சம்பந்தாண்டான் என்னும் ஒரு தேவி உபாசகரை அனேக விதங்களில் வென்றதாக பல கதைகள் சொல்லப்படுகின்றது. ஒன்று முருகனை தத்ரூபமாக அரசசபையில் வரவழைத்தது; மற்றொன்று பாரிஜாத மலர் கொணர கிளி உருக் கொண்டு தெய்வலோகம் சென்றது.

இவருடைய செய்யள்களை ஆராய்ந்தால், இவர் சந்தவிருத்தம் செய்வதில் வல்லவரென்று தெரிகின்றது. அவைகளில் ஒரு சிலவாவன: "சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேரமட்டில்'', ''ஏறுமயிலேறி விளையாடுமுகமொன்றே" முதலியன. மேலும் இவர் தம் தம்பிக்கு அறிவூட்ட. திருவக்க பாகையி லாண்ட கொங்கர்குல அரசனின் வேண்டுகோளன்படி பாரதம் பாடியதாகவும் சொல்லப்படுகிறது.

அப் பாரதச் செய்யுளில் ஒன்றாவன:

“கோவல்சூழ் பெண்ணை நாடன் கொங்கர் கோன் பாவை வேந்தன்

பாவலர் மானங்காத்தான் பங்கயச் செங்கை யென்ன

மேவல ரெமரென்னாமல் வெங்களந் தன்னி னின்ற

காவலன் கன்னன்கையும் பொழிந்தது கனகமாரி.”

 

இவருடைய முடிவைப்பற்றி பலர் பலவிதமாகக் கூறுகின்றனர். இவர் கிளி உருக்கொண்டு தேவலோகம் சென்றிருந்த சமயம், சம்பந்தாண்டான் இவ்ருடைய உடலைத் தகனஞ் செய்து விட்டதாகத் தெரிகின்றது. இதை யறிந்த கிளி தேவலோகத்தில் தேவியின் கரத்திலேயே பாடிக்கொண் டிருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

மற்றுஞ் சிலர், இவர் கிளி உருவுடனே பாரிஜாத மலர் கொணர்ந்து, பின் தம் சக்தியினால், தாம் தெய்வ லோகம் சென்றிருந்த சமயம் சம்பங் தாண்டான் செய்த எல்லாவித சூழ்ச்சிகளையும் அரசனுக் கறியப்படுத்தி, அவனை தண்டனைக் கள்ளாக்கி, பின் தன் வாழ்நாட்களைக் கிளி உருவத்துடனேயே இருந்து அனேக பாக்கள் இயற்றி, பிறகு இவர் கிளி உருவத்துடனேயே முக்தி அடைந்ததாகச் சொல்லப்படுகின்றது.

"கந்தரநுபூதி பெற்றுக் கந்தரநுபூதி சொன்ன – எந்தை யருணகிரி."

என்று தாயுமானவர் இவரைப்பற்றி சிறப்பாகச் சொல்கின்றார். மற்றும்,

"ஐயா! அருணகிரி அப்பா! உனைப்போல

மெய்யாக ஓர்சொல் விளம்பினர்யார்? வையகத்தோர்

சாற்றரிதென் றேசற்றார் தன்னனையாய் முக்கணெந்தை

நாற்றிசைக்குங் கைகாட்டி னான்.''

 

என்று தாயுமானவரே மற்றொரு இடத்தில் அருணகிரியாரைப்பற்றி போற்றிக் கூறுகிறார். என்னே இவரது வாழ்க்கையின் சிறப்பு!

ஆனந்த போதினி – 1937 ௵ - ஜனவரி ௴

 

 

No comments:

Post a Comment