Saturday, August 29, 2020

ஐய வினா விடை

 

 

"ஐந்தில் இரண்டு பழதில்லை'' என்ற பழமொழிக்குப் பொருள் விளக்கவேண்டும் என்று நண்பர் S. N. சின்னையா பிள்ளை அவர்களும், 'அறிவைப்பரீக்ஷிக்கும் சொற்கள் " என்று தலைப்பீந்து 1. போய் வருபவை இரண்டு, 2. போனால் வராதவை இரண்டு, 3. எப்பொழுதும் இருப்பவை இரண்டு என்பவைகளை விளக்க வேண்டும் என்று எட்டையபுரம் நண்பர் K. சாமிநாதன் அவர்களும் எமக்கு ஐயவினாக்கள் விடுத்துல்ளார்கள். அவற்றிற்குநமது தமிழ்ப்பண்டிதர் ஆ. கமலநாத முதலியாரவர்கள் கொடுத்துள்ளவிடைகள் வருமாறு:

 

தங்கள் நாயகரையே தெய்வமாகக் கருதும் பெண்களின் சொற்படியே தெய்வமும் நடக்கும். மழையும் பெய்யும். இக் கற்பனைய மங்கையர்கள் தங்கள் நாயகன் இறந்த மாத்திரத்தில் இடியோசை கேட்ட சர்ப்பத்தைப் போலத் தம் முயிர் நீங்குவர். இதற்குச் சான்றாக சூரபதுமனுடைய மனைவியாகிய பதுமகோமளை யென்பாள் தன் நாயகன் இறந்தான் என்னும் சொல் காதிற் பக்கபோதே உயிர் நீங்கினாள். இச் செய்கை தலையன் பின்பாற்பட்டது. தன் நாயகர்கள் தரித்திர முடையவர்களாயினும் தீக்குண முடையோராயினும், கிழவராயினும், நோயாளர்களாயினும், அழகில்லாதவராயினும், அவயவமில்லாதவராயினும், வஞ்சக மூடர்களாயினும் அவர்கள் மாட்டு அதிகவிருப்ப முடையவர்களாகவே யிருப்பார்கள். கொழுநன் புசித்த பின் புசித்தலும், நாயகர் தூங்கின பிறகு தாம் தூங்குதலும் அவர்கள் படுக்கையை விட்டெழாததற்கு முன்னே எழுந்திருத்தலும் அவர்கள் மனையிலுள்ள காலத்தில் அணி முதலியலைகளை அணிதலும் அவர்கள் வெளியே போன காலத்தில் நகை முதலானவைகளை அணியாதிருத்தலும், நாயகர்கள் துன்புறுங் காலத்தில் துன்புறுத்தலும் உரல், அம்மி, உலக்கை, வாயிற்படி, முறம் இவற்றின் மீது உட்கார்ந்தால் திருவகன்றிடுமென்று நினைத்து உட்காராத தன்மையையும் அடையப் பெற்றிருப்பார்கள்.

 

இப்படிப்பட்ட பெண்களிலே தலைமையுடைய பெண்கள் -பஞ்ச கன்னிகை யென்று பெரியோர்களால் குறிப்பிக்கப்பட்டிருக்கிறது.

 

அப்பஞ்ச கன்னிகைகளிலே தலைமையானவர்கள் சீதையும், மண்டோதரியமாம். மற்றவர் அகலிகை, திரௌபதை, தாரை யென்பவர்கள். பின் மூவர்களுக்குச் சிற்சில தோஷங் கூறப்படுகின்றது. அவைகளையெடுத்துப் பேசுவாம்.

 

அகலிகை கௌதமருடைய பத்தினியா யிருந்தும் தேவேந்திரன் தன்னைக் காதலுற்றுத் தழுவிய காலத்தும் தேவேந்திரனென்று தெரிந்தும், சம்மதித்திருந்தனள். தாரை யென்பாள் வியாழ பகவானுடைய பத்தினியாயிருந்தும் சந்திரனிடத்துக் காதல் கொண்டு தவறி நடக்க நேர்ந்தது. திரௌபதி எவர்களாலும் புகழுங் கற்பினையுடையளா விருப்பினும், ஐவர்களையும் நாயகராகக் கொண்டாளென்னும் வதந்தி யுண்டாயிருப்பினும், பழம்பொருந்து சுருக்கத்தில் தனக்குக் கர்ணன் மீது கருத்துப் பொருந்தி யிருக்கின்ற தென்றும் பகர்ந்தனள். ஆகையால் மேற்கூறிய பஞ்ச கன்னிகைகளில் சீதையையும் மண்டோதரியையுமே சிறப்பாகக் கொள்ள வேண்டியிருக்கின்றது. இத்துணைச் சிறப்பினர்களாயுள்ள கற்புடைய பெண்களின்இலக்கணத்தைப் புகழ வந்த ஒளவையார்,


 “தண்ணீர் நிலநலத்தால் தக்கோர்குணங் கொடையால்
 கண்ணீர்மை மாறாக் கருணையால் பெண்ணீர்மை
 கற்பழியா வாற்றால் கடல் சூழ்ந்த வையகத்தில்
 அற்புதமா மென்றே யறி”


 என்று கூறியவாற்றாலுணர்க.


 
அறிவைப் பரீக்ஷிக்கும் சொற்கள்.


(1) போய் வருபவை இரண்டு.


துன்றும் சகல கேவலமும் தாயநனவு கனவினைப் போல்

என்றும் போதல் வருதல்செயும் இரவும் பகது மென்று நனி

மன்னுள் நடஞ் சய் பெருமானார் மாற்றம் புகலு மாதலினால்

வென்ற புலனார்க்கிவை தோன்றா வீரமெளிதில் வந்திடுமே.


சகல கேவலமும் நனவு கனவுகளும் போல இரவும் பகலும் என்றும் போக்குவரத்தும் ஆம். ஆனால் ஐம்புலன்களை வென்றார்களுக்கிவை யெல்லாமின்னாம்.


(2) போனால் வராதன இரண்டு - இளமைப் பருவமும் வயோதிகப்பருவமும்.

 
 பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம்
 கனியுகர்ந்து வீழ்ந்தற்றளமை - நனிபெரிதும்
 வேற்கண்ண ளென்றிகளை வெஃகன்மின் மற்றிவளும்
 கோற்கண்ணளாகுங் குனிந்து


என்று இளமைப் பருவமும் வயோதிகமும் போனால் வராதென்று கூறப்படு
கிறது.


(3) எப்பொழுதும் இருப்பவை இரண்டு - சூரிய சந்திரர்கள்.

 

ஒரு காலத்தில் பார்வதி பரமேஸ்வரனை தேவர் மனிதர் முதலாகிய எல்லாப் பிறப்பினர்களும் உலகில் உள்ள எல்லாப் பொருள்களையும் எப்படி அறிகின்றார்கள் என்று கேட்டதற்குச் சூரிய சந்திரர்களாகிய நமது கண்களினால் என்றார். உடனே விளையாட்டாகச் சிவபெருமான் இரண்டு கண்களையும் மூட உலக முற்றும் இருண்டது. அவ்வமயம் நெற்றிக் கண்ணால் ஒளி தந்தார்.

 

இனி அதிகாரிகளாகிய கருமி, முமூட்சு, அப்பியாசி, அனுபவி, ஆரூடன் என்பவர்களில் மேற்சொல்லிய முமூட்சு அப்பியாசி அனுபவி இம்மூவர்களுக்கும் பிறப்பு உண்டென்றும், அனுபவி ஆரூடன் இவர்களுக்குப் பிறப்பு இல்லை யென்று கொள்ளலுமாம்.


ஆனந்த போதினி – 1930 ௵ - பிப்ரவரி ௴

 

 

No comments:

Post a Comment